கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனாவுக்கு பலி..!!

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் நேற்று மேலும் 9,725 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,84,990 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,536 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி.யான அசோக் கஸ்டி கொரோனாவுக்கு பலியானார்.

பா.ஜ.க. எம்.பியான அசோக் கஸ்டி, கொரோனாவுக்கு பெற்று வந்த சிகிச்சை பலன் கொடுக்காமல் இன்று உயிரிழந்தார்.

மறைந்த பா.ஜ.க. எம்.பி. அசோக் கஸ்டிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment