தவறாக வழிநடத்த வேண்டாம்: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கும் நிலையில் பிரதமர் மோடி பேச்சு..!!

வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் விவசாயிகளை திசைதிருப்பும் வகையில் போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில் ‘‘விவசாயிகள் சரியான தொகையை பெறமாட்டார்கள் என்று தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. விவசாயிகள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்து கொண்டிருக்கிறார்கள்.

கோதுமை மற்றும் அரிசி போன்றவகைகள் விவசாயிகளிடம் இருந்து அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்யாது என்று பொய் செய்தி பரப்பப்படுகிறது. இது முற்றிலும் பொய். முற்றிலும் தவறானது. விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி.

வேளாண் குறித்து பொய்யான செய்தி பரப்பப்படுகிறது, விவசாயிகள் விழித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களை தவறாக வழிநடத்த தூண்டப்படுகிறீர்கள். பழைய முறையை பயன்படுத்தி உங்களை துயரத்தில் தள்ளி அவர்கள் விரும்புகிறார்கள். பல ஆண்டுகளக ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகள் மற்றும் வேளாண் குறித்து அதிகமாக பேசினார்கள். ஆனால் ஒன்றுமே செய்யவில்லை’’ என்றார்.

Comments (0)
Add Comment