ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,096 பேருக்கு கொரோனா தொற்று – 67 பேர் பலி..!!

ஆந்திரா மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 8,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,09,558 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,244 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 84,423 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 5,19,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Comments (0)
Add Comment