மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 23,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 405 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 21,656 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.67 லட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 405 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 791 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 8,34,432 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,00,887 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment