கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 179 பேர் பலி: பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது..!!

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 94 ஆயிரத்து 356 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 8,626 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 179 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,808 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 206 பேர், பல்லாரியில் 296 பேர், பெலகாவியில் 221 பேர், பெங்களூரு புறநகரில் 112 பேர், பெங்களூரு நகரில் 3,623 பேர், பீதரில் 46 பேர், சாம்ராஜ்நகரில் 67 பேர், சிக்பள்ளாப்பூரில் 63 பேர், சிக்கமகளூருவில் 109 பேர், சித்ரதுர்காவில் 141 பேர், தட்சிண கன்னடாவில் 456 பேர், தாவணகெரேயில் 146 பேர், தார்வாரில் 135 பேர், கதக்கில் 31 பேர், ஹாசனில் 173 பேர், ஹாவேரியில் 116 பேர், கலபுரகியில் 179 பேர், குடகில் 44 பேர், கோலாரில் 63 பேர், கொப்பலில் 176 பேர், மண்டியாவில் 69 பேர், மைசூருவில் 600 பேர், ராய்ச்சூரில் 116 பேர், ராமநகரில் 70 பேர், சிவமொக்காவில் 257 பேர், துமகூருவில் 208 பேர், உடுப்பியில் 493 பேர், உத்தரகன்னடாவில் 181 பேர், விஜயாப்புராவில் 86 பேர், யாதகிரியில் 143 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு பல்லாரியில் 25 பேர், பெங்களூருவில் 37 பேர், தட்சிண கன்னடாவில் 11 பேர், தார்வாரில் 9 பேர், ஹாவேரி, கலபுரகியில் தலா 6 பேர், கொப்பலில் 8 பேர், மைசூருவில் 17 பேர், சிவமொக்காவில் 18 பேர் உள்பட 179 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 57 ஆயிரத்து 470 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. ஒரே நாளில் 10 ஆயிரத்து 949 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 94 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து ஒரு ஆயிரத்து 129 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 814 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கொரோனாவுக்கு ஒரே நாளில் 179 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கர்நாடக அரசும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Comments (0)
Add Comment