மகாராஷ்டிராவில் இன்று 21 ஆயிரம் பேருக்கு கொரோனா – 23 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

அம்மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரத்து 907 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 88 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 501 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 57 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 425 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது.

Comments (0)
Add Comment