கொரோனாவில் இருந்து மீண்டார் மந்திரி பைரதி பசவராஜ்..!!

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு மக்கள் பிரதிநிதிகளும் விதிவிலக்கல்ல. மாநிலத்தில் இதுவரை முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட 80 மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை கொரோனா தாக்கியுள்ளது. அவர்கள் அனைவருமே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு பா.ஜனதாவை சேர்ந்த அசோக் கஸ்தி எம்.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் மூலம் அவர் கொரோனாவின் பிடியில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார். இதையடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் மேலும் ஒரு வாரம் வீட்டில் தனிமையில் இருக்க உள்ளார். அதன் பிறகே அவர் தனது வழக்கமான பணியில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment