அமெரிக்காவை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 42.35 லட்சத்தைக் கடந்துள்ளது.

Comments (0)
Add Comment