கொரோனா பாதிப்பு முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் – மலாலா சொல்கிறார்..!!!

தலீபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான யூசுப்சாய் மலாலா நோபல் பரிசு பெற்றவர். சர்வதேச அளவில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மலாலா அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கொரோனா பாதிப்பால் பெண்கள் கல்வி கற்பதை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும், நோய்த் தொற்று பாதிப்பு முடிவடைந்த பின்னரும் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார். பெண்கள் கல்விக்கான இலக்கை எட்டுவதில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்த அளவே சாதிக்க முடிந்து இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

இந்த தகவலை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ‘டான்’ பத்திரிகை வெளியிட்டு உள்ளது

Comments (0)
Add Comment