மோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..!!

துபாயை சேர்ந்த இந்திய சிறுமி சுசேதா சதீஷ் (வயது 15). இவர் அங்கு 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்துஸ்தானி இசையையும் கற்று வருகிறார்.

‘நமோ நமோ விஷ்வகுரு பாரத்’ என்ற தலைப்பில், பிரதமர் மோடிக்கு இவர் பாடிய பிறந்தநாள் வாழ்த்து பாடல் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது, அஜய் கோபால் என்ற மலையாள பாடலாசிரியர் எழுதியது ஆகும். அதை சுசேதாவின் தாயார் சுமிதா இந்தியில் மொழி பெயர்த்தார். சுசேதா பாடினார்.

அதில், மோடியின் அரசியல் வாழ்க்கை, ‘மேக் இன் இந்தியா’ பிரசாரம், இந்தியாவின் மலைகள், ஆறுகள், பாலைவனம் ஆகியவை காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் இணையதளங்களிலும் வெளியாகி, சுசேதாவுக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது. துபாயில் உள்ள இந்திய துணைத்தூதர் அமன் பூரியும் அவரை பாராட்டினார்.

சுசேதா, ஏற்கனவே கொரோனா விழிப்புணர்வு பாடல்களை 29 மொழிகளில் பாடி உலக சாதனை படைத்தவர். கடந்த 2018-ம் ஆண்டு, துபாய் ஓபராவில் பிரதமர் மோடிக்கு முன்பு பாடல் பாடியுள்ளார்.

Comments (0)
Add Comment