வவுனியாவில் வயல் காணி அபகரிப்பை தடுத்தால் அதிகாரிகளின் தவறுகள் வெளியிடப்படும் அச்சுறுத்தும் நபர்!!

பூவரசங்குளத்திலிருந்து வேலன்குளத்தை அடுத்துள்ள மடுக்குளம் பகுதியில் காலஞ்சென்ற முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரால் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட யில் நெற் செய்கைகளை மேற்கொள்ளவிடாமல் அவர்களை அங்கிருந்து துரத்தியடித்து அவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி வயல் காணியை அங்கிருக்கும் நபர் ஒருவரினால் அபகரிக்கும் நடவடிக்கையினைத்தடுத்து நிறுத்துமாறும் இந்நடவடிக்கையினை தடுத்து நிறுத்த முற்படும் அரச அதிகாரிகளின் தவறுகள் வெளியிடப்படும் என்றும் குறித்த காணியை அபகரித்துள்ள நபர் அவர்களை அச்சுறுத்தி வருவதாக மடுக்குளம் சனசமூக நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற சிவசிதம்பரத்துடன் பணியாற்றிய 33 பேருக்கு பூவரசன்குளம் மடுக்குளத்ததை அண்டிய பகுதியில் ஒரு ஏக்கர் வயல் காணிகள் வழங்கப்பட்டிருந்தது அவற்றிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது மகன் வெளிநாடு ஒன்றிலிருந்து வந்து வயல் செய்கை மேற்கொண்டு வரும் குறித்த 33 வயல் காணிகளுக்கு சட்டத்தரணிகளுடாக எமது பெயரில் காணி மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிரதேச செயலகத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் அக்காணிகளை எமக்கு வழங்கவிடாமல் எமது காணியையும் அங்கிருந்த ஏனைய விவசாயிகளின் வயல் காணிகளையும் அங்குள்ள நபர் ஒருவரின் அடாவடித்தனத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது . தற்போது அவரினால் அப்பகுதியில் 110 ஏக்கரில் வயல் நெற் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இதனால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் எமக்கு வழங்கப்பட்ட காணி அபகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் . இவ்விடயம் குறித்து பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதமான முடிவும் விவசாயிகளாகிய நமக்குக் கிடைக்கவில்லை .

குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரச அதிகாரிகள் அச்சப்படுகின்றனர் . அரச அதிகாரிகளினால் இடம்பெற்ற ஊழல்கள் , காணி மோசடிகள் , தவறுகள் குறித்த தகவல்களை வயல் காணியை அபகரித்துள்ள நபர் தகவல் அறியும் சட்டத்தினூடாக பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை வெளியிடுவதாகவும் அவர்களை அச்சுறுத்தியதால் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர் .

குறித்த நபரின் அடாவடி நடவடிக்கையினால் அங்கு செயற்பட்ட கமக்கார அமைப்பு செயற்பாடுகள் இன்றி கடந்த மூன்று வருடங்களாக காணப்படுகின்றது . எனவே இதனைத்தடுத்து நிறுத்தி எமது வயல் நிலங்களை எமக்கு பெற்றுக்கொள்வதற்கு ஊடகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு மேலும் தெரிவித்துள்ளனர் .

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment