வடக்கிற்கான ரயில் சேவை தாமதம்!!

சாலியபுர பகுதியில் ரயிலொன்று தடம்புரண்ட காரணத்தினால் வடக்கிற்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலே‍ இன்று பிற்பகல் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தி‍ வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment