யாழ் பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிசாருக்குமிடையில் முரண்பாடான சூழ்நிலை!! (வீடியோ, படங்கள்)

யாழ் பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிசாருக்குமிடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே நுழையும்படி பொலிசார் அவர்களை அறிவுறுத்தயுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, மாணவர்களை மிரட்டும் வகையில் பெருமளவு பொலிசாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிசார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கறுப்பு உடையணிந்த மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது அங்கு குவிந்த பொலிசார் மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு பணித்துள்ளனர்.

எனினும், மாணவர்கள் அதை நிராகரித்தனர். இதனால், மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டு, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.உதவிக்கு இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment