மயங்கி விழுந்து உயிரிழந்த 35 வயது குடும்பஸ்தர்!!

கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கி விழுந்து குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், தொண்டைமானாறு பகுதியில் இன்று (27) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தொண்டைமானாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment