மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு!!

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 349 ஆக அதிகரித் துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

150 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குவைட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகள் மற்றும் தூதரகத்தின் காப்பகத்திலிருந்த 44 பணிப்பெண்களுக்கும் கோவிட்- 19 கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் குவைட்டிலுள்ள இலங்கை தூதர கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரை தற் காலிகமாக மூடப்பட்டிருக் கும் என தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment