திலீபனை வைத்து தமிழ் தேசிய அரசியல் வியாபாரம். என பதாதைகளை ஏந்தியவாறு யாழில் இன்று போராட்டம்.!! (வீடியோ, படங்கள்)

நாளையதினம் வடகிழக்கு முழுவதும் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான இளைஞரணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் வரை சென்று பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஒரு மகஜரினை கையளித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
போதும் போதும் உங்கள் தமிழ் தேசிய வியாபாரம்.
எம்மை வைத்து உழைத்தது உங்களுக்கு போதாதா?
தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகளே எமது அடிப்படை உரிமைகளை முதலில் நிறைவேற்றுங்கள்.
திலிபனை வைத்து தமிழ் தேசிய அரசியல் வியாபாரம்.
கடையடைப்பு உங்கள் அரசியல் வியாபாரத்திற்கா?
திலிபனை வைத்து மீண்டும் சூடு பிடிக்கும் தமிழ் தேசிய வியாபாரம்.
நாம் அன்றாடம் உழைப்பவர்கள் எமது பொருளியல் உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை எந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)

பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் – சீ.வி.கே.சிவஞானம்!!! (வீடியோ)

Comments (0)
Add Comment