வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வவுனியா தனியார் பேருந்துகள் வழமை போன்று நாளைய தினம் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ் ரி. கே. ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளால் நாளை திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவைகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவரும் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் விடுக்கவில்லை.

பேருந்து சேவைகள் தொடர்பிலும் எம்மிடம் எந்த கலந்துரையாடலையும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் மேற்கொள்ளவில்லை.

எனவே எமது சேவைகளை நிறுத்தும் தீர்மானங்களை நாம் எடுக்க முடியாது. வழமைபோல் வவுனியாவில் இருந்து தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

திலீபனை வைத்து தமிழ் தேசிய அரசியல் வியாபாரம். என பதாதைகளை ஏந்தியவாறு யாழில் இன்று போராட்டம்.!! (வீடியோ, படங்கள்)

தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)

பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் – சீ.வி.கே.சிவஞானம்!!! (வீடியோ)

Comments (0)
Add Comment