அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஹர்த்தால்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியமும் ஆதரவு!!

வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“அரசினதும் அதன் படைகளின தும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப் படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் எவரும் கற்றல் செயற்பாடுகளில் பங்கெடுக்க மாட்டார்கள்.

தேவையற்ற சில தரப்புக்கள் மாணவர்களை இலக்கு வைத்து சில சதி நடவடிக்கைகளில் ஈடுபட லாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்குமாறும் கோருகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

நாளைய ஹர்த்தாலுக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கமும் பூரண ஆதரவு!!!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது – மாவை !! (வீடியோ)

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்!!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!!

திலீபனை வைத்து தமிழ் தேசிய அரசியல் வியாபாரம். என பதாதைகளை ஏந்தியவாறு யாழில் இன்று போராட்டம்.!! (வீடியோ, படங்கள்)

தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)

பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் – சீ.வி.கே.சிவஞானம்!!! (வீடியோ)

Comments (0)
Add Comment