இயற்கை உரப் பாவனை வெற்றியளித்துள்ளது- அடுத்த பருவத்தில் 48,000 ஹெக்டேயரில் செய்கை!!

நேற்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி சூழலுக்குகந்த உரத்தைப் பயன்படுத்தி மகா பருவம் 2020/2021 காலத்தில் மொத்தமாக 48,000 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

2020ஆம் ஆண்டு யால பருவத்தில் இது போன்ற உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதே இத்திட்டத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாகும்.

இது இரசாயன உர மானிய திட்டத்தின் கீழ் ரூபா 250 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 14 மாவட்டங்களில் இயற்கை திரவ உரம், இயற்கை உயிரி உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி 25,000ஹெக்டேயர் வயலில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும்.

இது இரசாயன உரப் பாவனையை 30-50 சதவீதத்தால் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment