20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது; சட்டமா அதிபர் அறிவிப்பு!!

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு சில திருத்தங்களை முன்வைக்கவுள்ளது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தின்போது அந்தத் திருத்தங்களை முன் வைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 20ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனுக்கள் நேற்று உயர்நீதிமன் றத்தில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று 7 மனுக்கள் மாத்திரமே ஆராயப்பட்டுள்ளன. மற்றைய மனுக்கள் இன்று ஆராயப்படவுள்ளன.

Comments (0)
Add Comment