மலையக மக்களுக்கு வீடு வழங்கும்போது லயன்களை அண்மித்ததாக நிர்மாணிக்க வேண்டும்- ஜனாதிபதி!!

மலையக மக்களுக்கு வீடு வழங்கும்போது லயன்களை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுட்டிக்காட்டி யுள்ளனர்.

மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக் கும் திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அரசாங் கத்தின் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது 669 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், லயன்களை அண்மித்ததாக புதிய வீடு களை நிர்மாணிப்பதன் மூலம் இத்திட்டத்தின் நன்மை களை விரைவாக மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியுமென ஜனாதிபதியும் பிரதமரும் சுட்டிக்காட்டினர்.

மலையக மக்களின் வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற் காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங் களுக்கு, ஆதரவாகத் தனியார் தோட்ட நிறுவனங்கள் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment