வடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க அமைச்சர் சமல் ராஜபக்ச!! (படங்கள்)

வடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது என உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமாகாராமை பகுதியின் சுவாத்திய நிலைமைகளை வவுனியாவிலும் உணர முடிகிறது. உண்மையில் வடக்கில் இருக்கின்ற பிரச்சனைகள் தான் தெற்கிலும் இருக்கின்றது. இருவரும் அந்த பிரச்சனைகள் என்ன என்பதை இனங்கண்டு அதற்கு தீர்வு காண்பதில் அந்த வெற்றி இருக்கிறது. எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாணை மக்களது தேவைகளை துரிதமாகவும், சிறப்பாகவும் வழங்குவதே.

பிரதேச செயலக பிரிவுகளில் இருக்கின்ற பிரச்சனைகள் என்ன. அதற்கு என்ன தீர்வு எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அலுவலகங்களில் பணியாற்ற வசதிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை செய்து கொடுக்கவுள்ளோம். பிரதேச செயலாளர்கள் பலர்ன் விடுதிகள் சீர் செய்ய வேண்டியுள்ளது. அதனை செய்து கொடுக்க வேண்டியுள்ளது.

கிராமிய மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அறிந்து அதனை தீர்ப்பதற்கு அரசுக்கு கோரிக்கை விடுவோம். கடந்த தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். அங்கு இருக்கும் மக்களுக்கு குடிநீர் பிரச்சனை பெரிய பிரச்சனையாகவுள்ளது. அந்த பிரச்சனையை தீர்க்க மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

அரச அலுவலங்களுக்கு வருகின்ற மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றதா என்பது குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றோம். மக்களுக்கு காணிக்கான உறுதிப் பத்திரங்கள் இல்லாமை, காணிப் பிரச்சனைகள், குடிநீர் பிரச்சரன என்பன காணப்படுகின்றன. சிலர் வன ஓதுக்கீட்டுக்கான காணிகளுக்கு உறுதி பெறுகின்றனர். இதனை தடுக்க வேண்டும். மக்களுக்கான காணிகளை வழங்க வேண்டும். அரச அதிகாரிகள் சிலர் மக்களுக்கு சிறப்பாக வேலை செய்கிறார்கள். சிலர் மக்களிடம் ஏதாவது பெற்றுக் கொண்டு வேலை செய்கிறார்கள். இந்த நிலைமைகள் மாற்றப்பட்டு மக்களுக்கு உண்மையாக பணியாற்ற வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் ஊக்கத்துடன் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும். மக்களது தேவைகளை நாம் இனங்கண்டு அதனை துரிதமாக தீர்க்க வேண்டும் என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment