அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு!!

அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டமானது எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் எஸ் .ஆர் .அட்டிகல்லே நேற்று நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது தெரிவித்தார். இவ்வருடத்திற்கான வருமானம் மற்றும் செலவுகளை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமலே சமாளித்தது. எவ்வாறாயினும் அரசாங்கமானது செலவீனங்களுக்கான அனுமதிக்காக பல முறை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை முன்னெடுத்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு செலவு பற்றாக்குறையானது இவ்வருடம் 9% ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் , அடுத்த வருடம் இது 4.5% ஆக அமையும் . ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கைக்கு அமைய பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொது மக்களின் நலன்களை கருத்திற்க் கொண்டு இவ்வரவு செலவு திட்டமானது முன்வைக்கப்படும்.. அத்துடன் சரிவடைந்த வர்த்தகம் மற்றும் வர்த்தக துறையை புதுப்பிக்கும் வகையிலும் இது முன்வைக்கப்படும் என செயலாளர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment