சிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை: பூஜித்!!

தேசிய பாதுகாப்பு பேரவையில்(என்எஸ்சி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒரு முடிவு எடுக்கப்பட்டதும் முன்னாள் பிரதமர் ரணில் உட்பட எவருமே அதனை சவாலுக்குட்படுத்த முடியவில்லை என முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று செப்.30ஆம் திகதி சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய பாதுகாப்பு பேரவையில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகளும் சிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை விமர்சிக்கவோ கருத்து சொல்லைவோ அது பொருத்தமானதாக இருக்கவில்லை. சிறிசேனவால் செய்யப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக அவற்றை சவாலுக்குட்படுத்தும் சூழல் இருக்கவில்லை என அவர் கூறினார்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் சாட்சியிடம் 2017 முதல் தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் குழுவினரது செயற்பாடுகளின் விளைவுகளை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை எனக் கேட்டதற்கு, நிலைமையை நன்கு புரிந்து கொண்டேன். ஆனால் அந்த நேர அரசியல் சூழ்நிலை, நாட்டின் கொள்கை, சில கட்டுப்பாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடையாக இருந்தன என ஜயசுந்தர தெரிவித்தார்.

Comments (0)
Add Comment