மதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்!!

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக ஒன்றி ணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மதுவரித்திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகை யில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் திணைக்கள அதி காரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம் பெற்றது.

இதன் போதுஅரசியல் அழுத்தம் காரணமாக இடமாற்றப் பட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகளின் இடமற்றங் களை உடனடியாக நிறுத்தி, தகுதி அடிப்படையில் இட மாற்றம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

Comments (0)
Add Comment