பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளருக்கு காதல் சின்னத்தை கொடுத்த கவின்.. வைரலாகும் பதிவு! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் ஒருவருக்கு கடந்த சீசன் போட்டியாளரான கவின் ஹார்ட்டின் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகர் கவின்.

சரவணன் மீனாட்சி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ள கவின், நட்புன்னா என்னன்னு தெரியுமா என்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

நான்கு காதல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பெரும் பிரபலமானார். முதலில் சாக்ஷியை காதலித்த அவர் பின்னர் லாஸ்லியாவை காதலித்தார். ஒரே நேரத்தில் நான்கு பேரை காதலித்தால் பிரச்சனை வராது என்று கூறி நான்கு பேரை காதலித்ததாக கூறி கமலிடம் வாங்கிக்கட்டினார்.

கடும் விமர்சனம்

இதற்காக கடும் விமர்சனத்திற்கு ஆளானார் கவின். அதோடு இயக்குநர் சேரன், மோகன் வைத்யா, கஸ்தூரி, மதுமிதா என பலருக்கும் பட்டப்பெயர் வைத்து கிண்டலடித்தார். இதனால் அவர் மீது கடும் கோபமடைந்தனர் ரசிகர்கள். இருந்தபோதும், சமூக வலைதளங்களில் இருந்த ஆதரவால் கடைசி வரை வந்தார் கவின்.

ஹார்ட்டின் கொடுத்த கவின்

கடைசி வாரங்களில் கொடுக்கப்பட்ட ஆப்ஷனில் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்சியில் கேம் சேஞ்சர் விருதை பெற்றார் கவின். இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் ஒருவருக்கு ஹார்ட்டினை கொடுத்துள்ளார்.

முதுகில் சுமந்த சுரேஷ்

அதாவது கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிக்பாஸ் கேப்டன் டாஸ்க்கில் தான் ஆதரவு தெரிவித்த கேப்ரியல்லாவை வெற்றி பெற வைக்க அவரை முதுகில் தூக்கி சுமந்தார் சுரேஷ். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் செமயாக விளையாடி வருகிறார் சுரேஷ்.

அன்பும் ஆதரவும்

எல்லாவற்றையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ளும் சுரேஷுக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. பிரபலங்கள் பலரும் சுரேஷுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு ஹார்ட்டினை கொடுத்து தனது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார் கவின்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment