கமல் திட்டுகிறார் என்பதை கூட புரிந்துகொள்ளாமல்.. சுரேஷை கிண்டல் செய்து பாட்டுப்பாடிய வேல்முருகன்! (வீடியோ, படங்கள்)

கேப்டன் டாஸ்க்கின் போது சுரேஷை தாத்தா தாத்தா என கிண்டல் செய்து பாட்டுப்பாடியது குறித்த வேல்முருகனிடம் விசாரித்தார் கமல்.

பிக்பாஸ் வீட்டின் வரும் வார கேப்டன் தேர்வுக்கான டாஸ்க் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ரியோ, வேல் முருகன் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது ரியோவுக்கு பாதி ஹவுஸ் மேட்ஸும், வேல்முருகனுக்கு பாதி ஹவுஸ்மேட்ஸும் ஆதரவு தெரிவித்தனர்.

தூக்கி சுமக்க வேண்டும்

ஆனால் கேப்ரியல்லாவுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே ஆதரவு கொடுத்தார். போட்டியாளர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் அவர்களை தூக்கி சுமக்க வேண்டும் என்றார் பிக்பாஸ்.

ஆதரவு கொடுக்கவில்லை

இதனை தொடர்ந்து ரியோவை பாலாஜி முருகதாஸும் வேல்முருகனை ஆரியும் தூக்கிக் கொண்டு சுமந்தனர். தனக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என போட்டியிலிருந்து விலகுவதாக கூறினார் கேப்ரில்லா.

பிடிவாதமாக தூக்கி சுரேஷ்

ஆனால் நீ வெயிட் கம்மி, ஆகையால் நான் தூக்குகிறேன் என்றார் சுரேஷ் சக்கரவர்த்தி. இல்லை, உங்களுக்கு உடம்பு சரியில்லை ஆகையால் நீங்கள் சுமக்க வேண்டாம், நான் டாஸ்கில் பங்கேற்கவில்லை என்றார் கேபி. என்னால் முடியாவிட்டால் நான் சொல்கிறேன் நீ வா என பிடிவாதமாக கேபியை அழைத்து சென்று தூக்கி சுமந்தார்.

கேலி செய்த வேல்முருகன்

அப்போதும் கேபி, வேண்டாம் தாத்தா, உங்களால் முடியவில்லை விடுங்கள் என்றார். ஆனால் அவரை விடாமல் நீ என்னை பிடித்துக்கொள், எனக்கு வலித்தால் சொல்கிறேன் என்றார். அப்போது எதிரே ஆரி மீது அமர்ந்திருந்த வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தியை கேலி செய்யும் விதமாக பாட்டுப்பாடினர். கமல் கேள்வி கமல் கேள்வி முதலில் பக்தி பாடலை பாடிய வேல் முருகன், பின்னர் தாத்தா தாத்தா என பாட்டுப்பாடினார்.

தாத்தா

பொடி குடு என பாட்டுப்பாடி சுரேஷ் சக்கரவர்த்தியை கேலி செய்தார் வேல்முருகன். இதனை கவனித்த கமல் இன்றைய எபிசோடில் அதுகுறித்து வேல்முருகனிடம் கேள்வி எழுப்பினார்.

மன நிலை எப்படி இருக்கும்

சுரேஷ் வியற்வை சொட்ட சொட்ட நிற்கும் போது, அப்படி ஏன் பாடினீர்கள், அவர் மனநிலை எப்படி இருக்கும்? என்ன பாட்டு பாடினீர்கள்? அதை கொஞ்சம் பாடுங்கள் என்றார். உடனே கமல் பாட சொல்லிவிட்டார் என படு ஜாலியாக சுரேஷ் சக்கரவர்த்தியை கிண்டல் செய்து பாடிய அந்த பாடலை உற்சாகமாக பாடினார்.

சனத்தை கட்டிப்பிடித்து

கமல், அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி டேமேஜ் செய்கிறார் என்று கூட தெரியாமல் தான் செய்த அதே தவறை மீண்டும் செய்து அசிங்கப்பட்டார் வேல்முருகன். ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தியுடன் சண்டை போட்டது, சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது போன்ற சர்ச்சைகளில் சிக்கினார்.

எதற்காக கேட்கிறார்?

இந்நிலையில் சுரேஷை கேலி செய்ததை இன்று படு உற்சாகமாய் பாடி அன்று பார்க்காதவர்களும் இன்று பார்க்கும்படி செய்து தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொண்டார் வேல்முருகன். இதனை பார்த்த நெட்டிசன்கள் கமல் எதற்காக கேட்கிறார் என்று கூட தெரியாமல் பாடுகிறார் என்று கழுவி ஊற்றியுள்ளனர்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment