இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தோம்.. பயங்கர அப்செட்டில் பாலாஜியின் அப்பா.. வைரலாகும் தகவல்! (வீடியோ, படங்கள்)

பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என கூறியதால் அவரது அப்பா பயங்கர அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார்.

பல விளம்பரப் படங்களில் நடித்துள்ள பாலாஜி முருகதாஸ் ஏராளமான டைசன் என்ற படத்தில் வில்லன் ரோலில் நடிக்கிறார்.

எதுவும் கிடைக்கவில்லை

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் தான் கடந்து வந்தப் பாதை குறித்து ஷேர் செய்தார் பாலாஜி முருகதாஸ். அப்போது தன்னுடைய அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என்றும், சிறு வயதில் இருந்தே தனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறி தான் கலங்கியதோடு மற்றவரையும் கலங்க விட்டார்.

மிஸ் வாங்கி கொடுப்பார்

சிறு வயதில் ஒரு நாள் கூட தனது அம்மா தனக்கு பள்ளிக்கூடம் செல்ல சமைத்துக் கொடுத்ததில்லை என்றும் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து குடித்துவிட்டு தன்னை கவனிக்க வில்லை என்றும், பள்ளிக்கூடத்தில் மிஸ்தான் தனக்கு மதிய சாப்பாடு வாங்கிக் கொடுப்பார் என்றும் கூறினார்.
எதுக்கு பெத்துக்றீங்க

மேலும் இரவில் எந்த காரணமுமே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் தன்னை கேஸ் பைப்பால் அடிப்பார் என்றும் படு உருக்கமாக பேசினார். நல்ல சாப்பாடு பெற்றோர் பாசம் என எதுவும் கிடைக்கவில்லை என்ற அவர், குழந்தைகளை நல்லா வளர்க்க முடியாத நீங்களெல்லாம் எதற்கு பிள்ளை பெற்றுக் கொள்கிறீர்கள் என்றார்.

பாலாஜிக்கு எதிர்ப்பு

அவரது பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது பேச்சைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண் கலங்கினர். அதேநேரத்தில் பெற்றோரை பற்றி பாலாஜி முருகதாஸ் அப்படி பேசியிருக்க கூடாது என்றும், அப்பாவை அடித்ததாக பெருமையாக கூறுகிறாரே என்றும் எதிர்ப்புகள் எழுந்தன.

பேசியதெல்லாம் பொய்

அதனை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் பேசியதெல்லாம் பொய் என பலரும் சமூக வலைதளங்களில் ஆதாரங்களை நீட்டினர். அவரது அப்பா சென்னையை சேர்ந்த பிஸ்னஸ் மேன் என்றும் அம்மா ஹவுஸ் வொய்ஃப் என்றும் அவரை பற்றி தெரிந்தவர்கள் கூறினர்.

சரக்கு குளியல்

சென்னையில் உள்ள சிறந்த பள்ளிக்கூடம் மற்றும் சிறந்த கல்லூரியில் பாலாஜி படித்ததாகவும் அது தொடர்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்ட நெட்டிசன்கள், அப்பா அம்மா குடிப்பார்கள் என்றீர்கள். ஆனால் நீங்கள் இப்படி சரக்கிலேயே குளிக்கிறீர்களே என்று கேட்டனர்.

பெற்றோர் அப்செட்

இந்நிலையில் பாலாஜியின் பெற்றோர், உலகமே பார்க்கும் நிகழ்ச்சியில் தங்களின் மகனே தங்களை குடிகாரர்கள் என்று கூறியதால் ரொம்பவே உடைந்து போய் இருக்கிறார்களாம். பாலாஜி கூறிய அனைத்தும் பொய் என்றும் விளையாட்டில் தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு சுயநலத்துடன் இருப்பதா என்றும் ஆதங்கப்பட்டு வருகிறாராம்.

இந்த பெயரை வாங்கவா?

இந்த பெயரை வாங்கவா, இவ்ளோ கஷ்டப்பட்டு மகனை வளர்த்தோம் என்றும் பாலாஜியின் பெற்றோர் புலம்பி வருகிறார்களாம். அதோடு பாலாஜி வளர்ந்ததை அருகில் இருந்து பார்த்த உறவினர்களும் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment