காதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா உருக்கம்! (வீடியோ, படங்கள்)

காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கமாகி விட்டது என்று நடிகை வனிதா விஜயகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

வனிதாவுக்கு எதிராக

பீட்டர் பாலின் முதல் மனைவி கொடுத்த புகாரை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்தது. வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சூரியாதேவி என்பவரும் நடிகை கஸ்தூரி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் வனிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.

காரசாரமான சண்டை

பீட்டர் பால் மோசமானவர் என்றும் அவர் சுயரூபம் விரைவில் தெரியும் என்று அவர் மனைவி ஹெலனும் கூறியிருந்தார். இந்நிலையில், சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த பீட்டர்பால், வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டது. இருவரும் கோவா சென்றிருந்த நேரத்தில் காரசாரமான சண்டை நடந்ததாகக் கூறப்பட்டது.

வீட்டை விட்டு

இதையடுத்து பீட்டர்பாலை, வனிதா வீட்டை விட்டு துரத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை விஜயகுமார் சமூக வலைதளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் பல விஷயங்களை எதிர்கொண்ட தைரியமான பெண் நான். அதிசயங்கள் மீது அதிசயங்கள் மீது இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன். தயவு செய்து வேறு எதையும் யூகிக்க வேண்டாம். அன்பால் மட்டுமே என்னை தாக்க முடியும். எனக்கு அதிசயங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அப்படி அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன். எனக்கு விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நொறுங்கும் நிலை நொறுங்கும் நிலை நான் ஒரு போதும் எந்த தவறும் செய்யவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அதை கொடுத்தேன். என் கனவுகளும் நம்பிக்கைகளும் நொறுங்கும் நிலையில் இப்போது இருக்கிறேன். காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கமாகிவிட்ட ஒன்று.

பறிபோகும் வாழ்க்கை

ஆனால், அதில் இருந்து மீண்டு வந்து தைரியமாக இருப்பேன். காதலை நம்பி ஏமாறுவது வேதனையாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கிறது. உங்கள் கண்களின் முன்னால் வாழ்க்கை பறிபோய் கொண்டிருப்பது மிகவும் வேதனையானது. இவ்வாறு கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்! (வீடியோ, படங்கள்)

லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்! (படங்கள்)

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

Comments (0)
Add Comment