நான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும் கண்ணீர்விட்ட அனிதா! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பேச வாய்ப்பே கொடுக்கப்படவில்லை என அனிதா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பார்வையாளர்களை கடுப்பேற்றியது. வந்த நாள் முதலே தேவையில்லாமல் எதையாவது பேசிவிட்டு கண்ணீர் விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அனிதா சம்பத்.

நேற்றைய எபிசோடில் தன்னுடைய பெயர், நாமினேஷனில் வந்துவிட்டது, இதனால் நான்தான் இந்த வாரம் வெளியேறுவேன் என்று கூறி கதறினார்.

யாரும் கேட்பதில்லை

அதுவே எரிச்சலை ஏற்படுத்திய நிலையில் தனக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தான் சொல்வதை யாரும் கேட்பதில்லை என ஒரு டிராமாவை கிரியேட் செய்து கண்ணீர் விட்டு அழுதார் அனிதா சம்பத்.

சொல்ல முயற்சித்த அனிதா

சொல்றீயா செய்றீயா டாஸ்க்கில் கேள்விக் கேட்கும் டீமில் இருந்தார் அனிதா சம்பத். அப்போது, ஏற்பட்ட பிரசச்னையால் பாதியிலேயே பாலா எழுந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ரியோ ஆரியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த அனிதா ஏதோ சொல்ல முயற்சித்தார்.

எனக்கு கல்யாணமாயிடுச்சு

ஆனால் ஆரியும் ரியோவுமே பேசியதால் கடுப்பான அனிதா சம்பத், நான் சொல்வதை யாருமே கேட்க மாட்டீர்களா? நான் சொல்லும் பாயிண்ட்டை கேளுங்கள். நான் ஒன்னும் குழந்தையல்ல. எனக்கு கல்யாணமாயிடுச்சு. நான் சொல்லும் பாயிண்ட் நல்ல பாயிண்ட்டாகதான் இருக்கும்.

சின்னப் பையன் பாலா

ஒரு நிமிஷம் சொல்கிறேன் என்கிறேன் என்னை பேசவே விட மாட்றீங்க. என்னை விட சின்னப் பையன் பாலா பேசுவது சரியாக இருக்கும் என்கிறீர்கள். என்னை விட பெரியவங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்றீங்க.. ஆனா இடைப்பட்ட எனக்கு வாய்ப்பு இல்லை.

என் வீட்டில் முடிவு எடுக்கிறேன்

என்னை பேசவே விடவில்லை. நான் பேசாததால்தான், இங்கு யாருக்கும் என்னை பற்றி தெரியவில்லை. அதனால்தான் நான் நாமினேஷன் லிஸ்ட்டில் வந்துள்ளேன். என் வீட்டில் நானும் என் கணவரும் மட்டும்தான் இருக்கிறோம். அங்கு எல்லா முடிவையும் நான்தான் எடுக்கிறேன். இங்கு என்னால் எடுக்க முடியாதா?

கதறி அழுத அனிதா

நான் அரசியல் முதல் அனைத்து வகையான செய்திகளையும் படிக்கும் ஒரு பெண். செய்தி ஊடகத்துறையில் இருந்து வருகிறேன். என்னை பேசவிடாமல் டம்மியாக்கப் பார்க்கிறீர்கள் என கதறி அழுதார் அனிதா சம்பத். அவர் போட்ட இந்த டிராமாவை ரியோ எதுவுமே பேசாமல் வைத்தக்கண் வாங்காமல் பார்த்தார்.

மிரண்டு போன ஆரி

அனிதாவால் மிரண்டு போன ஆரி, அய்யோ நீ பேசும்மா பேசும்மா என கெஞ்சினார். இடையில் புகுந்து பஞ்சாயத்து செய்த சனம் ஷெட்டி, ஆரி புரோ நீங்க பேசாதீங்க, அனிதா நீ பேசும்மா, அவங்க பேசட்டும் விடுங்க என கேட்டு கொண்டே இருந்தார்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment