அய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் முடிந்த நிலையில், ஹவுஸ்மேட்ஸ் சொன்ன காரணங்களை கூறிய பிக்பாஸை பெரிய விஷம் நீ என மரண கலாய் கலாய்த்தார் சுரேஷ்.

பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் 5 ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத், ஆஜித், பாலாஜி முருகதாஸ் ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.

ரியோ, சனம் ஷேட்டி, வேல்முருகன் மற்றும் அர்ச்சனா ஆகிய 4 பேர் நாமினேஷனில் இருந்து தப்பித்தனர்.

வழக்கமாக சொல்ல மாட்டார்

ரகசியமாக நடைபெற்ற நாமினேஷனில் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு காரணத்தை சொல்லி சக போட்டியாளர்கள் 2 பேரை நாமினேட் செய்தனர். வழக்கமாக ஹவுஸ் மேட்ஸ் சொல்லும் காரணங்களை பிக்பாஸ் வெளியே சொல்ல மாட்டார். காரணத்தை சொன்ன பிக்பாஸ் காரணத்தை சொன்ன பிக்பாஸ் இந்நிலையில் இன்று நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்தவர்களின் பெயர்களை அவர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கையுடன் கூறிய பிக்பாஸ், ஹவுஸ்மேட்ஸ்களின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்கள் சொன்ன காரணத்தை கூறினார்.

பட்டென உடைத்த பிக்பாஸ்

அதாவது, கொளுத்திப் போடுகிறார், பிரச்சனையை உண்டாக்குகிறார், அட்வைஸ் செய்கிறார், எவிக்ஷன் ஃபிரி பாஸை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று பட்டென போட்டு உடைத்துவிட்டார்.

நீ ரொம்ப விஷமோ

அந்த காரணங்கள் யார் யாருக்கானது, யார் கூறியிருப்பார்கள் என்று அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் இருந்தது. இதனை தொடர்ந்து வாஷ் ரூம் பக்கம் சென்று வந்த, சுரேஷ் சக்கரவர்த்தி கேமராவை பார்த்து, அய்யய்யோ நீ ரொம்ப விஷமோ என்று கேட்டு கலாய்த்தார்.

பத்த வச்சிட்ட பரட்ட

ஏற்கனவே எவிக்ஷன் ஃபிரி பாஸ் டாஸ்க்கின் போது, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளே பேசியதை லிவிங் ஏரியாவில் இருந்த டிவியில் லைவாக ஒளிபரப்பி கொளுத்திப் போட்டார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட வேல்முருகனின் பிரச்சனையின் போது பிக்பாஸை பரட்ட பத்த வச்சிட்ட பரட்ட என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment