அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் – வைரல்!! (வீடியோ, படங்கள்)

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் கொட்டும் மழையில் குடையை பிடித்து கூலாக நடனமாடி ஆதரவாளர்களை கவர்ந்துள்ளார். கமலா ஹாரிஸ் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு லேடி பாஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளனர் ஆதரவாளர்கள். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுடன் சேர்ந்து துணை அதிபர் பதவிக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

சாதிக்கும் கமலா

ஹாரிஸ் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கறுப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் பதிவு செய்வார்.

கொட்டிய மழை

அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. குடையோடு நடனம் மழை பெய்த நிலையிலும் அசராத கமலா ஹாரிஸ் குடையை பிடித்துக்கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்துள்ளார். அச்சமயத்தில் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த கூடிய வகையில் குடையைப் பிடித்தபடி மழையில் நடனமாடினார். கமலா ஹாரிஸ் மழை நடனத்தை வீடியோ எடுத்த ஆதரவாளர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர் லேடி பாஸ் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயகம் காத்திருக்காது

குடையுடன் நடனமாடும் போட்டோவை பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ் மழையோ அல்லது வெயிலோ ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது என்று பதிவிட்டுள்ளார். கூலான விபி கூலான விபி மழையில் குடையை பிடித்துக்கொண்டு நடனமாடி அனைவரின் அன்பையும் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ். அவரது நடன வீடியோவை வைரலாக்கி வரும் அவரது ஆதரவாளர்கள் கூலான விபி என்று பதிவிட்டுள்ளனர்.

அசத்தல் நடனம்

துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் மைக் பென்ஸ் உடனான நேருக்கு விவாதத்தில் பங்கேற்ற போது அனல் பறந்தது. இந்தநிலையில் புளோரிடாவில் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மழையில் குடையை பிடித்துக்கொண்டு கூலாக நடனமாடி அசத்தியுள்ளார் கமலா ஹாரிஸ். அன்பை வென்ற கமலா அன்பை வென்ற கமலா கடந்த வாரத்தில் புளோரிடா, பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரத்தில் பங்கேற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ட்ரம்ப் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளானர். கொரோனா வைரஸ் தாக்கியதை அடுத்து சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் பிரச்சார கூட்டத்தில் சமூக இடைவெளியின்றி பங்கேற்றனர்.

தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கூறினார் ட்ரம்ப். எல்லோரையும் முத்தமிட விரும்புவதாகவும் கூறினார். இப்போது கமலா ஹாரிஸ் மழையில் குடையோடு நடனமாடி அனைவரின் மனங்களையும் கவர்ந்துள்ளார்.

Comments (0)
Add Comment