நாடா? காடா? அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்! (வீடியோ, படங்கள்)

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்த நிலையில், இந்த வாரம் ஃபேஷன் டிரெஸ் காம்பெட்டிஷன் போல நாடக டாஸ்க் அரங்கேறியது. நாடா? காடா? என்ற இந்த டாஸ்க் குறித்த விளக்கங்களை நடிகர் ரியோ ராஜ் ஹவுஸ்மேட்கள் முன்னிலையில் வாசித்தார்.
ஒரு குரூப் சொர்க்கபுரி அரசர்களாகவும், மற்றொரு குழு மாயபுரி அரக்கர்களாகவும் வேடமிட்டு மாறினார்கள்.

அழகிய அரக்கி

இந்த டாஸ்க்கில் நம்ம செல்லக்குட்டி ஷிவானி நாராயணன் அழகிய அரக்கியாக, கருப்பு கலர் லெக்கின்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து வந்து ரசிகர்களை ஆரம்பத்திலேயே சுண்டி இழுத்தார். மேலும், முடி கொடுக்க வில்லையா என கேட்க, அதெல்லாம் இருக்கு ஆனால், விக் வைக்க முடியாது என தனக்கே உரிய கெத்தான ஸ்டைலில் சொன்னார்.

கட கடவென ரெடியானார்கள்

மத்த நேரம் எல்லாம் சொங்கி பாப்பாவாக இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் டாஸ்க் என்று வந்து விட்டால் மட்டும் எப்படி எக்ஸ்ட்ரா எனர்ஜி வருகிறதென்றே தெரியாத அளவுக்கு கட கடவென ரெடியாகி, புகுந்து விளையாடுகிறார்கள். அதிலும், நம்ம மொட்டை தல சுரேஷ் எனர்ஜி இந்த முறை ஓவர் லெவல் என்றே சொல்லலாம்.

மன்சூர் அலிகான் மாதிரி

வரைந்த மீசை, தலை நிற முடியென வைத்துக் கொண்டு வில்லன் மன்சூர் அலிகான் மாதிரி மெரட்டல் லுக் விடுகிறார் மொட்டை தல சுரேஷ். அவரை எல்லாம் சும்மா பார்த்தாலே சிரித்துவிடுவார்கள், மேலும், அவர் அடிக்கும் லூட்டிகளை பார்த்து பாவம் அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் ரொம்பவே பாவம் என்றே தெரிகிறது.

காமெடி சரவெடி

இம்சை அரசனாக வேஷம் போட்ட ரியோ ராஜ், அரசனாக மாறிய வேல் முருகன், ராஜமாதாவாக நிஷா, பாகுபலியாக பாலாஜி, இன்னொரு இளவரசனாக சோமசேகர், இளவரசிகளாக ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி மற்றும் ரியோவின் மனைவியாக சம்யுக்தா எல்லாருடைய மேக்கப்பை பார்த்தாலே காமெடி சரவெடியாகத்தான் இருக்கிறது

அராஜக அதகளம்

சொர்க்க புரி அரச குடும்பத்தினர் மேக்கப் காமெடி சரவெடி என்றால், மாய புரி அரக்கர்கள் மேக்கப் சொல்லவே வேண்டாம். போனி டெயில் வைத்த அரக்கியாக அனிதா, கவர்ச்சி காட்டேரியாக ஷிவானி, கேபி, அகோரிகளாக ஆரி, ஜித்தன் ரமேஷ், உருட்டி மிரட்டும் பயங்கர பேயாக அர்ச்சனா மற்றும் எல்லாத்துக்கும் பாஸாக மொட்டை பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி என அதகளப்படுத்தி விட்டனர்.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment