யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் டெங்கு புகையூட்டல் செயற்பாடு!! (படங்கள்)

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் டெங்கு புகையூட்டல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதனால் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்டபகுதிகளில் டெங்கு நுளம்பு பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் யாழ்ப்பாண நகரில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் டெங்கு புகையூட்டல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் டெங்கு நுளம்பு பரவாதவாறு புகையூட்டல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாநகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரின் வழிநடத்தலில் மாநகர சபை சுகாதாரப் பணியாளர்களினால் குறித்த புகையூட்டல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது..
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment