லாட்ஜில் ரூம் போட்டு.. லவ்வருடன் இருந்த போலீஸ்காரர்.. திடீரென ஆவேசமாக புகுந்த மனைவி.. செம ட்விஸ்ட்!! (படங்கள்)

லாட்ஜில் ரூம் போட்டு கொண்டு, கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருந்தார் போலீஸ்காரர்.. அப்போது திடீரென போலீஸ்காரர் மனைவி அந்த ரூமுக்குள் என்ட்ரி ஆனார்! தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்ட தலைநகர் பத்ராச்சலம்.. இந்த நகரில் ஆயுதப்படை போலீசாக இருப்பவர் சுபாஷ்.. இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. 2017-ல் திருமணம் நடந்துள்ளது.. சொந்தக்கார பெண்ணையே கல்யாணம் செய்துள்ளார்.. 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சுபாஷூக்கு வேறு ஒரு பெண் மீது கட்டுக்கடங்காத காதல் வந்துவிட்டது.. அந்த பெண்ணின் அழகில் விழுந்த சுபாஷ், அவரை அழைத்து கொண்டு பல இடங்களில் ஊர் சுற்றி உள்ளார்.. பலமுறை ரூம் போட்டு லாட்ஜ் எடுத்து தங்கி ஜாலியாக இருந்துள்ளார்.

சுபாஷ்

அடிக்கடி லாட்ஜ்களில் ரூம் போட்டு வருவது, சுபாஷ் மனைவிக்கு தெரிந்துவிட்டது.. சம்பவத்தன்றும் அப்படித்தான் சுபாஷ் லாட்ஜில் காதலியுடன் தங்கியிருந்தார்.. உல்லாசமாக இருந்திருக்கிறார்.. இது தெரிந்த மனைவி கொதித்தெழுந்து அந்த லாட்ஜின் ரூமுக்குள்ளேயே அதிரடியாக சென்றுவிட்டார்.. ஆவேசத்துடன் உள்ளே நுழைந்த மனைவியை பார்த்ததும் சுபாஷ் அலறிவிட்டார்.

லாட்ஜ்

மனைவி சும்மா வரவில்லை.. கூடவே தன் உறவினர்கள் சொந்தக்காரர்கள், நண்பர்கள் என ஒரு படையையே திரட்டி கொண்டு லாட்ஜிக்கு வந்தார். லாட்ஜின் மாடி ரூமில்தான் இந்த ஜோடி தங்கியிருந்தது.. அவர்களை தரதரவென இழுத்து கொண்டு வந்தனர் சொந்தங்கள்.. கள்ளக்காதலர்கள் 2 பேருமே மாஸ்க் போட்டிருந்தனர் என்றாலும் அடுத்த செகண்டே விழுந்த தர்ம அடியில் அவை காணாமல் போய்விட்டது.

சரமாரி தாக்குதல்

அந்த இளம் பெண்ணின் தலைமுடியோ தாறுமாறாக கலைந்து தொங்கியது.. அவரது முடியை பிடித்து இழுத்து நாலு அறை விட்டார் சுபாஷ் மனைவி.. வாயில் என்னென்னவோ கெட்ட வார்த்தைகளும் சேர்ந்தே விழுந்தன. அதற்கு மேல் சுபாஷை லாட்ஜுக்கு வெளியில் புரட்டி போட்டு வெளுத்தெடுத்துவிட்டார் மனைவி. வழக்கு பதிவு வழக்கு பதிவு பிறகு நடுரோட்டிலேயே அடித்து இழுத்து கொண்டு போய் ஸ்டேஷனில் 2 பேரையும் ஒப்படைத்தார்… மேலும் தன் போலீஸ்கார கணவர் மீது அந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே புகாரும் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர். வழக்கமாக போலீஸ்தான் ரெயிடில் சிக்குவார்கள்.. இப்போது போலீஸ்காரரே சொந்த பொண்டாட்டியின் ரெயிடில் சிக்கியதும், கும்மு கும்மென்று குமுறி எடுத்ததும் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment