ஏய்.. நீ வெளியே வாடா.. சுரேஷ் சக்ரவர்த்தியை படுகேவலமாக திட்டிய சனம்.. அனல் பறக்கும் புரமோ! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாடா இல்ல காடா டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகத்தில் நேற்று அரக்கக் குடும்பமாய் இருந்தவர்கள் இன்று அரச குடும்பமாய் மாறியுள்ளனர்.

காலையில் ஆரி, பாலாஜியுடன் மல்லுக்கட்டிய புரமோ வெளியானது. அந்த பீதி அடங்குவதற்குள் மற்றொரு புரமோ வெளியாகி மிரள விட்டுள்ளது.
சனம் மீது பட

அதாவது, இரண்டாவது புரமோவில் அரசரான சுரேஷ் சக்கரவர்த்தி தனது கையில் வைத்திருக்கும் ஆயுதத்தால் இடையில் மறைத்திருக்கும் துணியை விலக்க முயற்சிக்கிறார். அப்போது அந்த ஆயுதம் சனம் ஷெட்டியின் நெற்றியில் பட்டதாக தெரிகிறது.

அந்தாளு கொடுப்பானா?

இதனால் ஆத்திரமடையும் சனம் ஷெட்டி, இன்னும் ஒரு இன்ச் கீழே பட்டிருந்தால் என் கண்ணு போயிருக்கும் அந்தாளு கொடுப்பானா? என்ன நினைச்சுட்டு இருக்கான் அந்தாளு? என கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் பேசுகிறார்.

மூளை கெட்டுப் போச்சா?

உடனே சப்போர்ட்டுக்கு வரும் பாலாஜி, உங்களுக்கு மூளை கெட்டுப் போச்சா என்கிறார். அதற்கு மூளையே இல்ல என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. மூளை இல்லன்னா இங்க என்ன பண்றீங்க என மீண்டும் எகுறுகிறார் சனம் ஷெட்டி.

ஏய் வெளியே வாடா

பெட்டில் போய் படுக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. மீண்டும் விடாத சனம் ஷெட்டி, எனக்கும் மனசு இருக்கு.. ஏய் நீ வெளியே வாடா இப்போ என சுரேஷ் சக்கரவர்த்தியை அழைக்கிறார். அதற்கு நீங்க பண்ணலாம், நாங்க பண்ணக்கூடாதா என கேட்டப்படி உள்ளே படுத்திருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

பகீர் கிளப்பும் புரமோ

பார்க்கும் போதே பகீர் கிளப்புகிறது பிக்பாஸின் இன்றைய இரண்டாவது புரமோ. ஏற்கனவே அனிதா சம்பத், ரியோ ஆகியோர் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டனர். இந்நிலையில் அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் சனம் ஷெட்டி போடா வாடா என பேசுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Comments (0)
Add Comment