பாலாஜி போட்ட சண்டையெல்லாம் புஸ் ஆகிடுச்சே.. சனம் அளவுக்கு உன்னால டாஸ்க்ல ஜெயிக்க முடியலயேப்பா! (வீடியோ, படங்கள்)

பிக் பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் எபிசோடு ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோ இல்லையோ தெரியாது. ஆனால், ஹவுஸ்மேட்களை நல்லாவே உலுக்கி எடுத்து விட்டது. பாடி பில்டிங்கில் ஹீரோ என சொல்லிக் கொள்ளும் சோமசேகரும், பாலாஜியும் மைண்ட் கேமில் ஜீரோவாகவே உள்ளனர்.

சண்டை எல்லாம் போட்டு பிக் பாஸிடம் அனுமதி பெற்று மீண்டும் விளையாடியும் பாலாஜி அரக்கர்களிடம் அவுட்டாகி விட்டார்.

நீ பொம்பளையே இல்லை

சோமசேகர் அவுட்டாகி அரக்கனாக மாறி விட்ட நிலையில், அடுத்ததாக பாலாஜி முருகதாஸ் அரக்கர்களை ஜெயிக்கப் போவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால், அங்கே நடந்த சின்ன சண்டை காரணமாக நிஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அர்ச்சனா. புள்ளைய வளர்க்க தெரியல என அர்ச்சனா பேச, நீ பொம்பளையே இல்லை என நிஷா அடாவடியாக பேசி அசறடித்தார். உள்ளே இருந்து அவர் செய்யும் லூட்டி எல்லாம் தனி ரகம். தேவையில்லாத சண்டை தேவையில்லாத சண்டை மெயின் டோர் வழியாக வராமல், டுபாக்கூர் புகழ் பாலாஜி குறுக்கு வழியாக வந்ததால், ஆஜீத் அவரை தள்ளி விட, அரியணையில் உட்கார்ந்து விடாமல், இன்ஸ்டன்ட் அரக்கனாக மாறிய சோமசேகர் தடுத்தார்.

உடனே பாலாஜி அவுட் என சுரேஷ் அலம்பல் செய்து அவரை தொட, மேல இருந்து கையெடுங்க என மிரட்டிய பாலாஜி தேவையில்லாத சண்டையை ஸ்டார்ட் பண்ணாரு..

முதல்ல இருந்து

அன்னைக்கு காலையில 6 மணிக்கு கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சு என்கிற கதை போல, கோட்டை எல்லாம் அழித்து விட்டு, பிக் பாஸ் உதவியால் மீண்டும் மெயின் டோர் வழியாக பாலாஜி வெளியே வந்தார். ரம்யா பாண்டியனின் ராஜ தந்திர ஐடியாவால், வாசலிலேயே இந்த முறை உட்கார்ந்து கொண்டார்.

தொப்பையை காட்டிய மொட்டை மன்மதராசா

தாத்தா பாவம்னு சொல்றது எல்லாம் சுத்த பொய் என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். டாஸ்க் என்று வந்துவிட்டால், 16 வயது இளைஞனாய் மாறி விடுகிறார் சுரேஷ். தொப்பையை காட்டிக் கொண்டு, டோப்பாவை கழட்டி விட்டு, மன்மதராசா என பாடிக் கொண்டு அவர் ஆடிய ரவுசை பார்த்து லேசாக தலையை அசைத்து அவுட்டாகிட்டார் பாலாஜி.

சுரேஷுக்கு பேன்ட் கழண்டுடுச்சு

தொப்பையை காட்டிக்கிட்டு அந்த ஆட்டம் ஆடிய சுரேஷ் தாத்தாவின் பேன்ட் அத்தனை பொம்பள பசங்க இருக்கிற இடத்துல அப்படியே அவுந்து விழுந்துடுச்சு, எல்லாரும் பாலாஜியை விட்டு விட்டு தாத்தாவை ஓட்ட ஆரம்பித்து விட்டனர். நல்ல வேளை அரை டிராயர் போட்டு இருந்ததால் மொட்டை பாஸ் மானம் கப்பல் ஏறவில்லை.

சனமே சூப்பர்

சூப்பர் ஓவர் கிடைத்தும் அவுட்டான பாலாஜியை பார்த்த ரசிகர்கள், உனக்கு சனம் ஷெட்டியே சூப்பர் பா, அரம்பத்திலேயே அதிரடியா இறங்கி ஆடி அசத்திட்டாங்க, பவுல் உள்ள பந்து போடுற டாஸ்க்குலையும் ஜெய்ச்சாங்க, வேஸ்ட்டா சனம் கூட சண்டை போடுறதுக்கு மட்டும் தான் நீ லாயக்கி என பிக் பாஸ் ரசிகர்கள் பாலாஜியை ஓட்டி வருகின்றனர்.

எதுவுமே பண்ணல

பாலாஜியை விட ஷிவானி தான் இந்த டாஸ்க்குல எதுவுமே பண்ணல என்கிற ரிப்போர்ட்டும் எழுந்துள்ளது. கேபியாவது அப்பப்போ கேமராவில் மூஞ்சி தெரியுற மாதிரி ஏதாவது பண்ணுது. ஆனால், ஷிவானி நாராயணன் எந்தவொரு கிண்டல், கேலி எதுமே பண்ணாம கேமை விளையாடாம அட்மாஸ்பியராகவே இருக்காருன்னும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment