ஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள்!! (வீடியோ, படங்கள்)

“பாம்பை பக்கத்துலேயே போட்டிருக்கியே” என்று சுரேஷ் சொன்னபோது அதன் அர்த்தம் அப்போது உடனடியாக விளங்கவில்லை.. பிறகுதான், அது சனம் என்று தெரியவந்தது. பிக்பாஸ் வீட்டில் நேற்று புது டாஸ்க் நடந்தது.. அரக்கர் உலகம் vs ராஜா வீடு.. இவர்களுக்குள்தான் போட்டி.. பெல் அடிக்கும்வரை அரக்கர் கூட்டம் என்ன செய்தாலும் ஆடாமல் அசையாமல் ராஜா வீடு இருக்க வேண்டும். அசைந்துவிட்டால் அவரும் அரக்கர் கூட்டத்தில் ஒரு ஆளாக சேர்க்கப்பட்டுவிடுவார்.. இதுவே அந்த டாஸ்க்.

அப்படித்தான் எல்லாருமே உருமாறினார்கள்.. புது கெட்டப்பில் எல்லாரையும் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.. அதேபோல, பெரும்பாலும் இவர்கள் நடிப்பில் தொடர்பில் உடையவர்கள் என்பதால், இந்த டாஸ்க் அவர்களுக்கு புதுசாகவே தெரியவில்லை.. எல்லாருமே சிறப்பாக நடித்தார்கள். தாடி மீசை இல்லாத ரியோ, மகாராணி கெட்டப்பில் நிஷா, மொட்டை தலையில் திடீரென விக் வைத்து ஆளே மாறி போன சுரேஷ் என அனைவருமே வித்தியாச தோற்றத்தில் தெரிந்தனர். சுரேஷ் மட்டும் அடிக்கடி கேமரா முன்னாடி வந்து வந்து நின்று மிரட்டி கொண்டிருந்தார். சம்யுக்தாவுடன் சனம் விளையாட ஆரம்பிக்கும்போது, “பாம்பை பக்கத்துலேயே போட்டிருக்கியே என்று சொன்னார் சுரேஷ்.. அப்போது அதன் அர்த்தம் யாருக்கும் விளங்கவில்லை.. பிறகுதான், சனத்தை சுரேஷ் பாம்பு என்று குறிப்பிட்டது புரிந்தது. இதில் அனைவரையும் வழக்கம்போல சுண்டி இழுத்தது ரம்யா பாண்டியன்தான் கெட்டப்தான்.. ஜாக்கெட் இல்லாமல் கச்சையுடன் காட்சி அளித்த ரம்யா பாண்டியன் அச்சு அசல் இளவரசிபோலவே காட்சி அளித்தது ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கிவிட்டது.

இந்த டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆரி மட்டும் புலம்பி கொண்டே இருந்தார்.. கமல் முன்பு சுரேஷ் விமர்சித்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. “அது எப்படி என்னை சொல்லலாம், ரொம்ப தப்பு, நான் உங்களுக்கு என்ன அட்வைஸ் பண்ணேன்? என்று சுரேஷிடம் கேள்விகளால் துளைத்து கொண்டே கொண்டே இருந்தார்.

அது சரி.. எப்ப பார்த்தாலும் அட்வைஸ் செய்து கொண்டிருந்தால் திகட்டி விடும் என்பதை சுரேஷூக்கு விரைவில் புரியும் என்றே நம்பலாம்.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment