வவுனியாவில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் வெற்றிக்கொண்டாட்டம்!! (படங்கள்)

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் இன்று (22) நாடாளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் 91 மேலதிக வாக்குகளை பெற்று 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரவு 8.10 மணியளவில் வவுனியா கண்டி வீதியில் பொதுஜன பேரமுன கட்சி ஆதரவாளர்களினால் வெடி கொழுத்தப்பட்டதுடன் இனிப்புப்பொருட்களும் வழங்கி வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தலைவர் வசந்த , ஆதரவாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

எதிர்த்து வாக்களித்தார் ரிஷாட் பதியுதீன்; பைசல் காசிம், நசீர் அகமட் ஆதரவு!!

20 ஆபத்தானதென்றால் 19 மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் – அங்கஜன்!!

ஜனநாயகத்தை கொலை செய்கின்றது அரசாங்கம்!!

நிறைவேறியது ’20’ ! ஆதரவு 156; எதிர்ப்பு 65!!

ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம்; அமைச்சர் டக்ளஸ்!!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்- ஐக்கியதேசிய கட்சி!!

20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க சுதந்திரக்கட்சி தீர்மானம்!!

Comments (0)
Add Comment