வவுனியா குருமன்காடு வீதி தாரிடப்பட்டு செப்பனிடப்பட்டது!! (படங்கள்)

வவுனியா நகரசபைக்குட்பட்ட குருமன்காட்டு உள்ளக வீதியானது தாரிடப்பட்டு இன்று (22) செப்பனிடப்பட்டது.

வவுனியா குருமன்காடு முதலாம் வட்டாரம் பகுதிக்கு, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபனுக்கு 2020 இல ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து 1.3 மில்லியன் ரூபாவில் குறித்த வீதி கிறவல் இடப்பட்டு தாரிட்டு செப்பனிடப்பட்டது.

குருமன்காட்டு பகுதியில் 95 வீதமான நகரசபை வீதிகள் செப்பனிடும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருட இறுதிக்குள் அனைத்து வீதிகளும் செப்பனிடப்படும் என நகரசபை உறுப்பினர் எஸ். காண்டீபன் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment