ஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி! (வீடியோ, படங்கள்)

இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு கலக்கிக் கொண்டிருந்த ஷிவானி இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் அவருடைய போட்டோக்களும் வீடியோக்களும் இல்லாமல் அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் ஏங்கி தான் போய் இருக்காங்களாம். ஆனாலும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒன்றை மட்டும் ரசிகர்களுக்காக தவறாமல் செய்து விடுகிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நாலாவது சீசனில் முழுக்க முழுக்க பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரே சண்டை மயமாக தான் இருக்கிறது. எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டு எல்லாரும் இருக்கிறார்கள்.

செம டான்ஸ்

தூங்கி முடித்ததும் இவர்கள் போடும் ஆட்டம் தான் வேற லெவல் இருக்கிறது .அதில் எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு தூங்கி முடித்ததும் போடும் ஆட்டத்தில் ஹெவி லெவலில் எல்லாமே இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்ச்சு வருகிறார்கள். அதிலேயும் ஷிவானியின் ஆட்டம்தான் கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.

கூலா இருக்கு

இந்த வீட்டுக்குள் எதை செய்கிறீர்களோ இல்லையோ இந்த ஆட்டம் மட்டும் செமையாக போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய ஆட்டத்தை பார்ப்பதற்காக தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறோம் என்றெல்லாம் ரசிகர்கள் உருகி உருகி கமெண்ட் போட்டிருக்கிறார்கள். அதுவும் நேற்றைய எபிசோடில் கலக்கலான ஆட்டம் போட்டு தூங்கி முடித்ததும் இந்த அளவிற்கு கேவி பேர்பாமர்ஸ் பண்ணுறீங்களே மா என்று அனைவரும் கேட்டு வருகிறார்கள்.

நல்லா கலக்கணும்

இப்ப வரைக்கும் ஷிவானி இந்த வீட்டிற்குள் யாரிடமும் மிங்கிள் ஆகவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் போது நேத்து ஷிவானியும் பாலாஜியும் குழந்தைகள் போல ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதை வைத்து மீம்ஸ்களும் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இவர் அப்லோடு பண்ணும் கலக்கலான போட்டோக்களை காணாது தவித்து வந்த ரசிகர்களுக்கு நேற்றைய ஆட்டத்தின் போது சகலத்தையும் குலுக்கி அவர் ஆடிய ஆட்டம் தான் செமையாக இருக்கிறதாம்.

குலுக்கலாக ஆட்டம்

இப்ப வரைக்கும் அவர் இந்த வீட்டிற்குள் யாரிடமும் அவ்வளவாக மிங்கிளாகவில்லை. ஆனால் நேற்று தான் கொஞ்சம் களத்தில் இறங்கியிருக்கிறார். அரக்கர்களுக்கும் அரசர்களுக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது இவர் இந்த வீட்டிற்குள் கொஞ்சம் குறும்பு பண்ணிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.

ஷிவானியின் சண்டை

அதுமட்டுமல்லாமல் சண்டையெல்லாம் போட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் இவருடைய ரசிகர்கள் எங்க தலைவியும் பெர்பார்மன்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க என்று என்ஜாய் பண்ணி கொண்டிருக்கிறார்களாம். இருந்த இடம் தெரியாமல் இருந்த புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. இனி இதுதான் வேண்டும் என்றும் இனி ஷிவானியின் இன்னொரு முகத்தையும் பார்க்கப் போகிறீர்கள் .அம்மணி வாய்க்கு வாய் பேச ஆரம்பித்திருக்கிறார். இனிதான் கேம் சூடுபிடிக்க போகிறது என்றெல்லாம் அவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment