மானை வேட்டையாடிய நபரை மடக்கிப்பிடித்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர்!! (படங்கள்)

வவுனியா புளியங்குளம் காட்டுப்பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சியாக்க முற்பட்ட நபரை வவுனியா மாவட்ட செயலக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மடக்கி பிடித்துள்ளனர்.

வவுனியா வடக்கு புளியங்குளம் காட்டுப்பகுதியில் மான் , பண்றி போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வவுனியா மாவட்ட செயலக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புளியங்குளம் பொலிஸாரின் உதவியுடன் புளியங்குளம் காட்டுப்பகுதிக்கு நேற்று (22.10.2020) மாலை விஜயம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கில் நின்றதை அவதானித்த அதிகாரிகள் காட்டுப்பகுதியில் மேலும் ஊடுருவி சென்றனர். அச் சமயத்தில் மான் ஒன்றினை வேட்டையாடி இறைச்சியாக்க முற்பட்ட சமயத்தில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட உயிரிழந்த மான் , மோட்டார் சைக்கில் , கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஆகியோரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment