வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து : இளைஞன் படுகாயம்!! (படங்கள்)

வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து : இளைஞன் படுகாயம்

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (24.10.2020) காலை 10.30 மணியளவில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா வைரவர் கோவில் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் வைரவர் கோவில் முதலாம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அப்பாதையுடாக வந்த மோட்டார் சைக்கில் வாகனத்துடன் மோதுண்டதுடன் வேகக்கட்டுப்பாட்டையிழந்து அருகேயிருந்த மின்கம்பத்திலும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment