“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)

“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)

புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னைநாள் உபதலைவரும், வன்னித் தொகுதியின் புளொட்டின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப நகரபிதாவுமாகிய அமரர் தோழர். வைத்தியலிங்கம் பாலச்சந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று (24.10.2020) சனிக்கிழமை முற்பகல் இல:36, அண்ணாவீதி, பண்டாரிகுளம், வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இறுதி நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டு புளொட் அமைப்பின் கொடியை வைத்திலிங்கம் பாலச்சந்திரனின் பூதஉடலுக்கு போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.

இறுதி நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), உப தலைவர்கள் ஜி.ரி லிங்கநாதன் (விசு), வி.ராகவன்(ஆர்.ஆர்), புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், புளொட்டின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் பற்றிக், புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினருமான தோழர் காண்டீபன், புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரான பா.கஜதீபன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரான செ.மயுரன், புளொட்டின் மன்னார், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்கள் தோழர்கள் கோன்ஸால்ட், ராஜா, கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

All-focus
All-focus
All-focus
All-focus
All-focus
All-focus

All-focus
All-focus
All-focus
All-focus
Comments (0)
Add Comment