அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்..!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மத்தியில் தான் தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் சோதனையில் கண்டறிய முடியாத பின்விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில், இந்தத் தடுப்பூசியின் சோதனை உலகளாவிய அளவில் கடந்த மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி சோதனை மீண்டும் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அளித்துள்ள ஒப்புதலை தொடர்ந்து அங்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment