பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களை விஜயதசமி நாளில் கதறவிட்டார் வேல்முருகன்.

பிக்பாஸ் வீட்டில் நவராத்தரி மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.

இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸ் நகர வாசிகளாகவும் கிராம வாசிகளாகவும் பிரிந்து அதகளப்படுத்தினர்.

பெண்கள் நாட்டின் கண்கள்

நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களை பாராட்டி பேசும்படி கூறியிருந்தார் பிக்பாஸ். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண் போட்டியாளரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களை புகழ்ந்து பேசினர்.

மொத்த போட்டியாளர்களையும்

சில போட்டியாளர்கள் தங்களுக்கு வேண்டிய தங்களுக்கு நெருக்கமான பெண் போட்டியாளர்களை புகழ்ந்தும் பாராட்டியும் பேசினர். சில போட்டியாளர்கள் மொத்த பெண் ஹவுஸ்மேட்ஸ்களையும் மனதார பாராட்டியும் புகழ்ந்தும் பேசினர்.

நன்றி கூறிய சுரேஷ்

அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா, சனம், நிஷா, அர்ச்சனா, கேபி என அனைத்து பெண் போட்டியாளர்களையும் பாராட்டினார். அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களின் பொற்பாதங்களில் தனது நன்றியை உரித்தாக்கினார்.

ஒவ்வொருவரின் குணத்தையும்

அவரை போலவே அனைத்து பெண் போட்டியாளர்களையும் பாராட்டி பாட்டாகவே பாடினார் வேல்முருகன். ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும் அழகாய் பாட்டாய் படித்தார்.

தாயையும் தாய்மையையும்

தொடர்ந்து தனது வாழ்க்கையில் பெண்களின் பங்கு குறித்து பேசிய அவர், தனது தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் தனது மனைவிதான் என்றார். தொடர்ந்து பேசிய வேல்முருகன், தாயையும் தாய்மையையும் போற்றி பாடலை பாடினார்.

கண்ணீர் விட்ட பெண்கள்

ரொம்பவே உருக்கமாக இருந்த அவரது பாடலை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டனர். அம்மா பாடலை கேட்ட போது நிஷாவும் அனிதாவும் கண் கலங்கினர். குழந்தைக்காக தாய் பாடுவதாக பாடிய பாடலை கேட்டு அர்ச்சனாவும் சம்யுக்தாவும் கண்ணீர்விட்டு அழுதனர்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment