மைக்கை கழட்டிட்டு சனமை அடிக்க வந்த பாலா.. அரை எலுமிச்சை பழத்துக்கு இவ்ளோ பெரிய சண்டையா? (வீடியோ, படங்கள்)

அர்ச்சனா அக்காவை புகழ்ந்து பேச வேண்டும் என்கிற டாஸ்க்கில் சனம் ஷெட்டி பேசும் போது குறுக்க புகுந்து கலாய்த்த பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் மீண்டும் சண்டை முட்டிக்கிச்சு.

பாலாவும் அர்ச்சனாவும் நேத்து சண்டை போட்டு, அவங்களே அம்மா, பிள்ளை உறவுக் கொண்டு சமாதானம் ஆகி விட்ட நிலையில், மீண்டும் சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கும் பிக் பாஸ் சண்டையை கோர்த்து விட்டுள்ளார்.

புறாவுக்கெல்லாம் போரா என்பது போல, ஒரு எலுமிச்சை பழத்தை வச்சிட்டு இந்த சண்டையை நடத்திட்டாங்க.

மீண்டும் அதிகாரம் கிடைச்சிடுச்சு

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அதிகார டாஸ்க் மீண்டும் கிடைத்து விட அர்ச்சனா அண்ட் கோ மறுபடியும் தங்களது அராஜக அதிகாரங்களை பண்ண ஆரம்பித்தனர். ரம்யா பாண்டியன் ரியோவை பற்றியும் ஷிவானி நாராயணன் பாலாஜி நல்லவர் வல்லவர் என்றும், சனம் ஷெட்டி அர்ச்சனாவையும் புகழ்ந்தனர்.

அர்ச்சனாவை புகழ்ந்த சனம்

ராஜாமாதா அர்ச்சனா அவர்களே உங்களை பார்த்தா என்ன வேணா சொல்லலாம், உங்க கிட்ட என்ன வேணா கேட்கலாம் என்கிற நம்பிக்கை உங்களை பார்த்தா வருது என சனம் புகழ்ந்த உடன் 2000 பொற்காசுகளை பரிசாக அந்த பெண்ணுக்கு கொடுங்க என அர்ச்சனா சொன்னார்.

மூக்கை நுழைத்த பாலாஜி

எந்தவொரு பிரச்சனையிலும் மூக்கை நுழைக்கக் கூடாது என சனம் ஷெட்டிக்கு சொல்லிட்டு, பாலாஜியே இப்போ மூக்கை நுழைப்பது என்ன நியாயம். ஏம்மா அன்னைக்குத்தான சொன்ன புளி தரமாட்றாங்க, லெமன் தரமாட்றாங்கன்னு.. 2 ஆயிரம் பொற்காசுகள் கேன்சல் என கலாய்த்தார்.

முரட்டு ராஜா

உடனே கடுப்பான சனம் ஷெட்டி, பாலாஜி முரட்டு ராஜா அவர்களே.. நீங்க எவ்ளோ தான் முரடனாக இருந்தாலும், உள்ளே தங்கமான மனசு என அப்படியே மறுபடியும் பிளேட்டை மாற்றி போட்டாலும், பாலாஜியின் ஃபேஸ் டோட்டலாகவே மாறி விட்டது. இது போதாதா இவங்களுக்குள்ள சண்டை வெடிக்க என ரசிகர்களும் எலுமிச்சை சண்டையை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

மைக்கை கழட்டிட்டு எகிறிய பாலா

அந்த இடத்தை விட்டு வெளியேறிய பிறகு, அர்ச்சனா லெமன் கொடுக்காததை பத்தியெல்லாம் உன்னை சொல்ல சொன்னாங்களா என சனம் எகிற, உனக்கு மேல நான் எகிறுவேன் என பாலாஜி முருகதாஸ் மைக்கை கழட்டிட்டு எகிறி வந்த உடனே என்னடா கமல் பேச்சை மீறி சனம் கன்னத்துல அடிச்சிடுவாரோ என ரசிகர்கள் காத்திருந்து ஏமாந்து போனார்கள். எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment