கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!

கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் 47 வயதுடைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி கொழும்பிலிருந்து வீடு திரும்பிய அவர், சுகாதாரத் துறையினரால் சுயதனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முடிவு காணாது என்று அறிக்கை கிடைத்திருந்தது.
இந்த நிலையில் அவரிடம் நேற்று மீளவும் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அதன்போது அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பில் கட்டட நிர்மாணத்துறையில் பணியாற்றும் அவர் கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாக இரண்டு பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இவர் மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
ரயில் சேவையில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை – ரயில் நிலைய அதிபர் சங்கம் சாடல்!!
முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!
இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!
கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!
ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!
அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!
கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!