வவுனியாவில் துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை மோதித்தள்ளிய கயர்ஸ் வாகனம்!! (படங்கள்)

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை மோதித்தள்ளிய கயர்ஸ் வாகனம் : ஒருவர் படுகாயம்

வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை கயர்ஸ் வாகனம் மோதித்தள்ளியதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (23.11) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கயர்ஸ் வாகனம் அதற்கு முன்பாக சென்ற மற்றுமொரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை கயர்ஸ் வாகனம் மோதித்தள்ளியுள்ளது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment