சுதந்திரகட்சி வசமுள்ள செட்டிகுளம் பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி!! (படங்கள்)

சுதந்திர கட்சி வசமுள்ள வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு பாதீடு இரு மேலதிக வாக்கால் இரண்டாவது தடவையாக தோல்வியடைந்துள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதே சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 05, சிறிலங்கா சுதந்திர கட்சி 04, தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப் 03, ஐக்கிய தேசியக் கட்சி 02, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 01, முஸ்லிம் காங்கிரஸ் 01, பொதுஜன பெரமுன 01 என 17 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில், ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவுடன் சிறிலங்கா சுதந்திர கட்சி (07 உறுப்பினர்கள் ஆதரவுடன்) ஆட்சியமைத்திருந்தது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு பாதீடு மீதான இரண்டாவது தடவை வாக்கெடுப்பு இன்று (23.11) நடைபெற்ற நிலையில் தமிழ் தேசிய கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு-5, ஈபிஆர்எல்எப்-3, தமிழ் தேசிய மக்கள் முன்னனி-1 என்பன ஒன்று சேர்ந்து 9 உறுப்பினர்கள் இணைந்து வாக்களித்து பாதீட்டை தோல்வி அடையச் செய்தனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், பாதீட்டுக்கு எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்ததுடன், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நடுநிலமை வகித்திருந்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment